புதிய வெளியுறவுச் செயலாளர் நியமனம்!

பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுச் செயலாளராக தெஹ்மினா ஜன்ஜூவா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த அய்ஜாஸ் அகமது சவுத்ரி அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட உள்ளதையடுத்து, புதிய வெளியுறவுச் செயலாளர் விரைவில்
நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுச் செயலாளராக தெஹ்மினா ஜன்ஜூவா நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதிசெய்துள்ளது. ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதியாக தெஹ்மினா தற்போது பணிபுரிந்து வருகிறார். தெஹ்மினா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளராக மார்ச் முதல் வாரத்தில் பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுச் செயலாளர் பதவிக்கான போட்டியில் தெஹ்மினா உள்ளிட்ட பலர் இருந்தனர். இந்தப் பட்டியலில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக உள்ள அப்துல் பாசித்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் தெஹ்மினாவை வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...