போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை ஜெ., நினைவிடமாக மாற்ற வேண்டும் என முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் தோட்டம் ‛வேதா இல்ல'த்தில் தற்போது சசிகலா வாழ்ந்து வருகிறார். அந்த இல்லத்தை ஜெ
நினைவிடமாக மாற்ற வேண்டும் என பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து நேற்று கையெழுத்து இயக்கம் ஒன்று துவங்கப்பட்டது.
*கையெழுத்து இயக்கம்:*
சென்னையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் வீடு மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில் பெரிய பேனர் வைக்கப்பட்டு அதில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
*மக்கள் பெரும் ஆதரவு:*
பன்னீர்செல்வம் சார்பில் துவங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து இயக்கத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பு அ.தி.மு.க.,வினர் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பல இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என பலர் முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு வருகின்றனர். இரவிலும் பொதுமக்கள் பலர் வந்து கையெழுத்திட்டதால் முதல்வர் பன்னீர் செல்வம் வீடு பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.