பாலிடெக்னிக் கல்லூரிகள் : அங்கீகாரம் பெற உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. அதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை ஒப்பிடுகையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் பெருமளவு அதிகரித்துள்ளது.



இந்நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாவிட்டால் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி, அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, “ பொறியியல் டிப்ளமா படிப்புகளை வழங்கும் அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் வரும் 2017-18 கல்வி ஆண்டில் ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்)அங்கீ காரத்தை புதுப்பிக்க வேண்டும். அதன் பின்னரே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாவிட்டால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது.

ஏஐசிடிஇ அனுமதி விதிமுறைகளின்படி, அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். குற்ற நடவடிக்கை எடுத்து, மாணவர் சேர்க்கையை நிறுத்த முடியும். மாணவர் சேர்க்கைகான இடங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. மேலும், மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, கணகெடுப்பின் படி, தமிழகத்தில் 501 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2001-2002ஆம் ஆண்டு, பாலிடெக்னிக் படிப்பில் மொத்தம் 32 ஆயிரத்து 523 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2008-2009ஆம் ஆண்டு, அரசுக் கல்லூரிகளில் 5,747 பேர், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 753 பேர், தனியார் கல்லூரிகளில் 82 ஆயிரத்து 477 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 977 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...