பதவியேற்பு : சசிகலாவுக்கு இன்றைய சிக்கல்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக குழுத்தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் எப்போது முதலமைச்சராக பதவியேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும், அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் சசிகலா இன்று முதலமைச்சராக பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

முதல்வராக பதவியேற்கப்போகும் சென்னை நூற்றாண்டு வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக அமைச்சர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்து வருகின்றனர். மேலும், சென்னை மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று காலையே கட்சிக்காரர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து வரவேண்டும் என்றும் அதிலும் பெண்களை அதிகமாக அழைத்து வரவேண்டும் என்றும் கார்டனிலிருந்து உத்தரவு சென்றது. மேலிடத்தின் உத்தரவுக்கிணங்க அவர்களும் நேற்று முழுவதும் அதற்கான ஏற்பாடுகளில் முழுவீச்சாக இறங்கினர்

ஆனால் டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகனின் திருமணத்தில் பங்கேற்க சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அச்சந்திப்பில் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கவர்னருக்கு வேண்டப்பட்ட ஆந்திரா தொழிலதிபர்கள் மூலம் பேசியிருந்தார்கள். கவர்னரும் சென்னை திரும்பி 6ஆம் தேதியே சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தயாராக இருந்தார். இந்நிலையில் அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததால் அவர் டெல்லிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. பின்னர் டெல்லிக்கு சென்ற அவரை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்ததை தொடர்ந்து அவர் சென்னைக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் இன்று சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எப்போது சென்னைக்கு திரும்பினாலும் எந்த நேரத்திலும் சசிகலா பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...