அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தனது எழுத்துபூர்வ ஒப்புதல் இல்லாமல் யாரும் அதிமுக-வின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று, வங்கி மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை மயிலாப்பூர் கிளை முதன்மை மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜெயலலிதாவின் மறைவால் அதிமுக-வின் பொதுச்செயலர் பதவி காலியாகவுள்ளது. அதிமுக-வின் சட்ட விதி 20 பிரிவு 5ன் படி, பொதுச்செயலர் பொறுப்பு காலியாக இருக்கும்நிலையில், ஏற்கனவே இருந்த பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட மத்திய நிர்வாகக் குழு, துணை பொதுச்செயலர், பொருளாளர், தலைமைநிலையச் செயலர் போன்றோர் தொடர்ந்து அதே பதவிகளை வகிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொதுச்செயலர் நியமிக்கப்படும் வரை இதே நிலை தொடரும் என அதிமுக சட்ட விதி தெரிவிக்கிறது. இந்தநிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொருளாளராக என்னை நியமித்தார். நான் அந்தப் பதவியில் தொடர்கிறேன். எனவே, தங்களது வங்கியில் உள்ள அதிமுக-வின் நடப்புக் கணக்கை என்னைத்தவிர வேறு ஒருவரால் அதை இயக்க அனுமதிக்கக் கூடாது. எனது எழுத்துபூர்வ ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இதைச் செய்யக்கூடாது’’ என்று தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.