முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்-ஐ அழைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்படுவதைத் தடுக்கச் சொல்லி உத்தரவிட்ட போது, ஜார்ஜ் போனைத் துண்டித்துள்ளார். இதனால் சீற்றம் கொண்ட ஒ.பன்னீர் டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளரர் ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து ஜார்ஜின் நடவடிக்கை குறித்து கடிந்து
கொண்டுள்ளார். அப்போது கமிஷனர் பணிமாற்றம் தொடர்பாக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியனாதன் ஆகிய மூவருக்கும் விவாதம் நடந்தது. பன்னீர் செல்வம், ஜார்ஜின் மாற்றம் குறித்து கேட்டபோது, ஜே.கே.திரிபதி ஐ.பி.எஸ்., கரன் சின்ஹா ஐ.பி.எஸ்., சஞ்சய் அரோரா ஐ.பி.எஸ். ஆகியோரது பெயர்களை முன்மொழிந்துள்ளார் டி.ஜி.பி. இதில் பன்னீர் செல்வம் சஞ்சய் அரோராவின் பெயரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு உத்தரவு அளிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார்.
அப்போது டி.ஜி.பி. ராஜேந்திரன், ‘எம்.எல்.ஏ-க்கள் அப்புறப்படுத்தப்படுவது அதிமுக-வின் உட்கட்சி விவகாரம்’ என்று கூறியுள்ளார். தலைமை செயலாளர் கிரிஜாவோ, ‘போலீஸ் தலையிடும் அளவுக்கு சூழல் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.
அப்போது ஒ.பி.எஸ்., ‘நான் இந்த பிரச்னை குறித்து கவர்னரிடம் ஆலோசித்திருக்கிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பணிமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என அவர் எனக்கு அறிவுறுத்தினார். அந்த கூட்டத்திலிருந்து தப்பிய 4 எம்.எல்.ஏ-க்கள் என்னிடம் வந்து புகார் அளித்துள்ளனர். நான் தனிப்பட்ட முறையில் ஜார்ஜை அழைத்து எம்.எல்.ஏ-க்கள் கடத்தலை தடுக்கச் சொன்னபோது, அவர் மறுத்து விட்டார். இந்த சூழலை இக்கட்டான சூழல் என சொல்வதற்கு இந்த ஒரு காரணம் போதாதா’ என்று கூறியுள்ளார்.
இறுதியாக தலைமை செயலாளர் கிரிஜா, ‘இந்த விவகாரத்தில் கவர்னரிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க முடியும்; அவர் ஏற்றுக் கொண்டால் நான் பணிமாற்ற உத்தரவை பிறப்பிக்கிறேன்; இதில் கவர்னரின் முடிவே இறுதியானது’ என்று கூறியுள்ளார்.