பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ‘தத்கலில்’ விண்ணப்பிக்கலாம் !!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் ’தத்கல்’ முறையில் நாளை முதல் இரண்டு நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய
தனித்தேர்வர்கள் 16 மற்றும் 17ஆம் தேதி ’தத்கல்’ முறையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வு விபரங்கள் இடம்பெற்றுள்ளன. கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள், மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றிலும் விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் 125 ரூபாய், சிறப்பு அனுமதிக் கட்டணம் 500 ரூபாய், இணையதள பதிவுக் கட்டணம் 50 ரூபாய் என மொத்தம் 675 ரூபாய் ரொக்கமாக சேவை மையங்களில் செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீதில் உள்ள எண்ணைக் கொண்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். சென்னை, வேலூர், கோவை, மதுரை, நெல்லை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...