புதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டில், மாணவர்களின் நலன் கருதி, பல்வேறு பாட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, தாகூர் கலை கல்லுாரி, காரைக்காலில் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவ்வையார் மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லுாரி, மாகி மற்றும் ஏனாமில் தலா ஒரு கல்லுாரி என, 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.இதுதவிர, சொசைட்டி கல்லுாரிகளான கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, வில்லியனுார் கஸ்துார்பா பெண்கள் கல்லுாரி, மதடிகப்பட்டு காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என 4 கல்லுாரிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில், அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளை சேர்த்து, மொத்தம் 10 கல்லுாரிகள் செயல்படுகின்றன.கடந்த காலங்களில், பிளஸ் 2 முடித்தவுடன், மாணவர்கள் கண்களை மூடிக்கொண்டு மருத்துவம், பொறியியல் படிப்பையே தேர்வு செய்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புக்கான 'மவுசு' குறைந்ததால், மாணவர்களின் கவனம், கலை மற்றும் அறிவியல் பாட பிரிவுகள் பக்கம் திரும்பியது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக கலை, அறிவியல் பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.புதுச்சேரியில் அரசு கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., பி.காம்., உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கு (கப்பாஸ்), அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கவுன்சிலிங்போது, ஏராளமான ஏழை மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் கலை கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை அரசு உயர்த்தியபோதும், பற்றாக்குறை நீடித்தது.எனவே, வரும் கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள பாட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என, கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் திட்டமிட்டுள்ளார்.இதற்கு இடவசதி தேவை; பேராசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.பிளஸ் 2 தேர்வு துவங்குவதற்கு முன்னதாக, கல்லுாரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், பேராசிரியர் பணி இடங்கள், வகுப்பறை தேவை உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை இயக்குநர், அனைத்து கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு, வரும் 23ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாட பிரிவுகள் தேவைஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்ட கலை பாட பிரிவுகளே இன்றும் உள்ளது. பிளஸ் 2 விற்கு பிறகு, கல்லுாரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில், இந்த துறைகளை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், பெயரளவில் மட்டுமே பட்டத்தை பெறுகின்றனர்.இத்தகைய பாட பிரிவுகளை நீக்கிவிட்டு, நவீன காலத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் பாட பிரிவுகளை அதிக அளவில் துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி குழு அமைக்க வேண்டும்புதுச்சேரி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் பட்டம் பெற்று, மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களின் கல்வித்தரத்துடன் போட்டி போட முடிவதில்லை.புதுச்சேரி அரசு இதற்கென தனி குழுவை அமைத்து, கேரளா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட மாநில கல்லுாரிகளுக்கு சென்று, அங்குள்ள பாட திட்டங்களை பார்வையிட்டு, அதற்கு ஏற்ப பாட திட்டங்களை உருவாக்கினால் மட்டுமே, புதுச்சேரி மாணவர்களால் வெளிமாநில மாணவர்களுடன் சரிசமமாக போட்டி போட முடியும்.