சென்னை பல்கலை. தேர்வு முடிவு இன்று வெளியீடு !!

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 நவம்பரில் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்.3) வெளியிடப்பட உள்ளன.

தேர்வு முடிவுகளை results.unom.ac.in,
www. ideunom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.


மறுமதிப்பீடு, மறுகூட்டல்:

தேர்வுத் தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 7 முதல் 13 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 1000 கட்டணமும், மறுகூட்டலுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை "பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாகச் செலுத்தவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...