எம்.எல்.ஏ.க்களும் அவர்கள் தொகுதிக்குப் போக வேண்டும் !!

'ஆளுநரின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக்கட்ட முடிவு' - மாஃபா பாண்டியராஜன்.

இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து, நேற்று சட்டப்பேரவையில் நடந்தது பற்றி கூறியுள்ளனர்.
இதற்கு பின் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மாஃபா பாண்டியராஜன்,
'நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நடந்த சம்பவங்களைப் பற்றி ஆளுநரிடம் விளக்கினோம்.
சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சபாநாயகரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள், எம்.எல்.ஏ.,க்களை தொகுதிக்கு போகச் செல்லுங்கள் அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என்றோம்.
ஆனால் அவசர அவசரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. அது தவறு. அதைத்தான் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம். ஆளுநரின் நடவடிக்கையைப் பொறுத்து எங்களின் அடுத்தக்கட்ட செயல்கள் இருக்கும்' என்று கூறினார்.
மேலும், 'எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் தொகுத்திக்கு சென்றபோது மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். எதிர் தரப்பு எம்.எல்.ஏ.க்களும் அவர்கள் தொகுதிக்குப் போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...