பெண்கள் அசிங்கமாக உள்ளதால் வரதட்சணை கொடுக்கப்படுகிறது !!

வரதட்சணை ஏன் கொடுக்கப்படுகிறது?

பெண்கள் அசிங்கமாக உள்ளதால் வரதட்சணை கொடுக்கப்படுகிறது என்று, 12ஆம் வகுப்பு சமூகவியல் பாடநூல் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில், திருமணத்தில் ‘பெண் அசிங்கமாக இருப்பதால்’ வரதட்சணை கொடுப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், ஏன் வரதட்சணை கொடுக்கப்படுகிறது, வாங்கப்படுகிறது என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் அசிங்கமாகவும் ஊனமுற்றவராகவும் இருந்தால் திருமணம் நடப்பது எளிதல்ல. அதனால் மணமகன் வீட்டார் அதிகளவில் வரதட்சணை கேட்கின்றனர். இதனால், வேறுவழியில்லாமல் பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் 2012-2015க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, எந்த மாநிலத்திலும் இல்லாதளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் வரதட்சணையால் 7,048 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடப் புத்தகத்திலுள்ள அத்தியாயம், வெறுமனே பெண்களை மட்டுமே அவமானப்படுத்தாமல் குறைபாடுள்ள பெண்களையும் அவமானப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமணம் நடப்பதற்காக வரதட்சணை கொடுக்கின்றனர். ஆனால் ஒருசிலர் தன்மானத்துக்காக வரதட்சணை கொடுப்பதால், அது கவனக்குறைவாக குடும்ப கவுரவத்தில் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து பாந்த்ரா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், ‘இந்தப் பத்தியை முதல்முறை வாசிக்கும்போது அதிர்ச்சியடைந்தேன். எப்படி அவர்கள் ஒரு பாடநூலில் இவ்வாறான விஷயங்களை எழுதலாம்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பாலான ஆசிரியர்கள் இந்தப் பகுதியை வாசிக்காமல் தவிர்த்து விடுகின்றனர். இந்தப் பாடத்தை நடத்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்தப் பகுதியை குப்பை என்று கூறுகிறார்கள் என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

மாநில கல்வி வாரியத்தின் தலைவர் ஜி.கே.ஹமனே இதுகுறித்து கூறியதாவது: இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தபின்னர், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி வாரியத்திடமும் இதுகுறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வரதட்சணை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று அனைத்து மாநிலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில் இதுபோன்ற கருத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...