அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி பதிவி ஏற்றார்.அதனைத் தொடர்ந்து சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவி ஏற்க வேண்டுமென்று மக்களவை
துணை சபாநாயகர் தம்பித்துரை உட்பட அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறவிருக்கிறது. கூட்டத்தில் பங்குபெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் யாரிடமும் செல்பேசியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களும் உளவுத்துறையின் கண்காணிப்பில் பயந்து யாரிடமும் பேசவில்லை. சிலர் மட்டும் வாட்ஸ் அப்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். மேலும் கூட்டத்துக்கு வரும் எம்.எல்.ஏக்கள் அவரவர் தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவை என்று ஒரு பட்டியல் தயாரித்து வரும்படியும் மேலிடத்திலிருந்து உத்தரவு சென்றிருக்கிறதாம். மேலிடத்தின் இந்த உத்தரவால் எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதி தேவைகளை பட்டியலிட்டு கூட்டத்துக்கு எடுத்து வந்திருக்கிறார்களாம். தொகுதி தேவை பட்டியல்களை கூட்டத்துக்கு எடுத்து வந்திருந்தாலும் இன்று நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை மட்டும் பேசப்போகிறார்களா என்றால் அது இல்லை. சசிகலா நாளை முதல்வராக பதவியேற்கும் செய்தி முன்கூட்டியே வெளியில் தெரிந்தால் அவர் பதவியேற்பதை விரும்பாத சிலர் கூட்டமாக வந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் அது ஊடகங்களில் செய்தியாக வெளிவருமென்றும் அதன் மூலம் சசிகலா பதவியேற்பது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று மேலிடம் கருதுவதால் சசிகலா நாளை முதலமைச்சராக பதவியேற்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். அதனால் கூட்டத்துக்கு வரும் எம்.எல்.ஏக்களிடம் கூட நாளை முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்பதை வெளிப்படையாக கூறாமல் இருக்கிறார்களாம்.