வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகக் கூறி, வருமான வரித்துறை ஆணையர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து 12 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
ஹரிவன்ஷ்குமார் சௌத்ரி என்பவர் டெல்லியில் வருமான வரித்துறை ஆணையராக மேல்முறையீட்டு பிரிவில் பணியாற்றி வந்தார். வருமானத்தை மீறி
ரூ.4.28 கோடி சொத்துகளை சேர்த்து வைத்ததாகக் கூறி சிபிஐ, இவர்மீது வழக்கு பதிவுசெய்தது. இந்நிலையில், நேற்று ஹரிவன்ஷ்குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என நாடு முழுவதும் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, சூரத், பீகார், டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரிவன்ஷ்குமார் தனது பெயரிலும், தனது குடும்பத்தினரது பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை குவித்துவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நடத்திவரும் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆணையருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.