உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தாமதம் ஏன் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இன்று நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர்முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஏன் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தேர்தல் நடத்துவதில் ஏன் தாமதம் என, தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் குமார், ‘தேர்தல் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார். அப்போது, தேவைப்படும் உதவிகளை நிறைவேற்றித் தர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், சில கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், மாநில தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு என்றும், மாநில அரசின் உதவிக்காக காத்திருப்பதாகவும், அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் உத்தரவின்படி செயல்படுவதாக இருந்தால், தேர்தல் ஆணைய அமைப்பை உண்டாக்கியதன் நோக்கம் சிதைந்துவிடும் எனக் கூறினர். பின்னர், இந்த வழக்கை‌ வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...