புதிய ஊதிய உயர்வு வழங்க மின் ஊழியர்கள் கோரிக்கை !!

ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை, உடனடியாக வழங்குமாறு, அரசுக்கு, மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை, புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, 2015 டிச., முதல், புதிய ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை ஊதியம் உயர்த்தப்படவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த, 2003ல், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; ஆனால், அப்போதிருந்த, அ.தி.மு.க., அரசு, ஊதிய உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்தது. பின், ஆட்சி முடியும் தறுவாயில், 2006ல், மாதந்தோறும், 100 ரூபாய் மட்டும்
உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது. தற்போது, புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய, மின் வாரியம், அதிகாரி கள் குழுவை அமைத்துஉள்ளது. அதனுடன், இருமுறை பேச்சு நடத்தியும், ஊதிய உயர்வு அறிவிக்கவில்லை. இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான, நிலையில்லா அரசின் மீது, யாருக்கும் நம்பிக்கை இல்லை. எனவே, கால தாமதம் செய்யாமல், ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...