சென்னையில் உள்ள லாட்ஜ் மற்றும் விடுதிகளில் போலீஸ் அதிரடிச் சோதனையை தொடங்கி உள்ளது. ஆளுநரின் உத்தரவை அடுத்து சோதனை நடத்த கமிஷனர் ஜார்ஜ் ஆணை பிறப்பித்துள்ளார். வெளியூரைச் சேர்ந்த 1000 அடியாட்கள் சென்னை ஓட்டல்களில் தங்க வைப்பு என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்
ஆட்கள் மூலம் சென்னையில் கலவரம் ஏற்படுத்த சதி என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள திருமண மண்டபங்களிலும் போலீஸ் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக தங்கியிருக்கும் வெளியூர் ஆட்களிடம் அடையாள அட்டை இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாலை 6 மணிக்குள் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் கமிஷனருக்கு அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது.