சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் தடுமாற்றம் !!

சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள கெடு, நாளை முடிகிறது. ஆனால், 50 சதவீத மரங்களைக் கூட, அரசுத் துறையினர் அகற்றவில்லை.



கருவேல மரங்கள், அசுர வேகத்தில் வளர்ந்து, உள்ளூர் தாவரங்களை அழிப்பதுடன், நிலத்தடி நீரை உறிஞ்சி உயிர் வாழ்வதால், மனிதர்களுக்கும், பசுமை வளத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன. அவற்றை அகற்ற, வழக்கு தொடரப்பட்டு, தமிழக அரசுத் துறைகளின் காலதாமதம் காரணமாக, வழக்கு நீண்டு கொண்டே போனது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை, பிப்., 27க்குள் அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, மதுரை உள்ளிட்ட, 13 மாவட்டங்களில், ஜனவரி முதல் பாதிக்குள், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகம் முழுவதும், பிப்., 27க்குள் அகற்றும்படி கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் காலக்கெடு முடியும் நிலையில், தமிழகத்தில் பாதியளவு கருவேல மரங்கள் கூட இன்னும் அகற்றப்படவில்லை.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'இப்பணிக்கு, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை. எனவே, மரங்களை அகற்றுவதற்கு, கூடுதல் அவகாசம் தேவை' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...