ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை கோரும் வழக்கில், மாடுகளை வதைக்கும் புதிய ஆதாரங்களை தாக்கல் செய்வோம் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி,
மெரினாவில் மாணவர்கள் நடத்திய எழுச்சி போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும், தமிழகம் முழுவதும் விடிய,விடிய போராட்டங்கள் நடந்தன. ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்நோக்கத்துடன் எதிர்க்கும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரி, தமிழகம் முழுவதும் ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்கப்பட்டது. தமிழர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பீட்டா அமைப்பு மீண்டும் மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் வதைக்கப்பட்டதற்கான புதிய ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளதாக பீட்டாவின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் அதிகமான மாடுகள் வதைக்கப்பட்டதற்கு ஆதாரங்களை திரட்டியிருக்கிறோம். விரைவில் அவற்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வோம்’’ என்றார். பீட்டாவின் இந்த அறிவிப்பு மீண்டும் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.