மதுரை அரசு மருத்துவமனைகளின் கட்டட மராமத்து பணிகளை மேற்கொள்ளும் உதவி பொறியாளர் பணியிடங்களை வேண்டுமென்றே நிரப்பாமல் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம்
, பேரையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனை கட்டட பணிகள் மற்றும் மராமத்து பணிகளை மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர் தலைமையில் நான்கு உதவி பொறியாளர்கள் உள்ளனர்.
இது போல், மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லுார், அலங்காநல்லுார் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளின் மராமத்து பணிகளை மேற்கொள்ளும் உதவி செயற்பொறியாளரின் கீழ் நான்கு உதவி பொறியாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், இப்பகுதியில் பல மாதங்களாக இரண்டு உதவி பொறியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடக்க வேண்டிய மராமத்து பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 'கமிஷனில்' பங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதற்காக வேண்டுமென்றே புதிய அதிகாரிகள் நியமனம் தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் நடக்கும் மராமத்து பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மட்டும் அரசு காப்பீட்டு திட்டத்தில் ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது தவிர, மராமத்து பணிகளுக்கென சில கோடிகள் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப கட்டடங்களின் தரம் இருப்பதில்லை. ஒப்பந்ததாரரிடம் லட்சக்கணக்கில் 'கமிஷன்' பெறுவதால், கட்டடத்தின் தரம் படுமோசமாக உள்ளது.
தற்போது போதிய உதவி பொறியாளர்கள் இல்லாததால் மதுரை, சமயநல்லுார் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே பணியில் உள்ள உதவி பொறியாளர்களின் கீழ் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகளில் பெறப்படும் 'கமிஷன்' தொகை பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.புதிய உதவி பொறியாளர்களை நியமித்தால், கமிஷனில் அவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், சில அதிகாரிகளால் அந்நியமனம் தொடர்ந்து தடுக்கப்படுகிறது, என்றார்