தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன
பொதுவாக வெயில் காலத்தில் குழந்தைகளை தட்டம்மை, சின்னம்மை நோய் தாக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. தட்டம்மை நோய் வேர்க்குரு போல் உடல் முழுவதும் சின்ன
சின்னதாய் தோன்றும். இதனால் ஜூரம், இருமல், சளி, கண்ணில் நீர் வடிதல் போன்ற அறிகுறி இருக்கும். இந்த நோயைத் பரப்பும் கிருமிகள் மிகவும் நுட்பமானவை. ஒரு குழந்தைக்கு ஏற்படும் இந்த வைரஸ்க் காற்று மூலம் அந்த பகுதி முழுவதும் உள்ள குழந்தைகள் பலரை பாதிக்கும்.
கடந்த 2015இல் தட்டம்மையால் ஏற்பட்ட குழந்தைகள் இறப்புகளில், இந்தியாவில் மட்டும் எழுபதாயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசியால் தடுக்கக்கூடிய இறப்புகளில் தட்டம்மை முதல் இடத்தில் உள்ளது.
இந்த பாதிப்புகளை தடுக்கவே தமிழக அரசு 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசியை இலவசமாக போடவுள்ளது.
இந்த தடுப்பூசியால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் வதந்திகள் பரவி வருகிறது இதனால் மக்கள் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசியை போடுவதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர்.
இதனால் மாணவர்களும் மருத்துவ குழுக்களும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளைமுதல் 28ம் தேதி வரை தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
9 மாதம் குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும்..
சென்னையில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. , இதன் மூலமாக சென்னையில் 16.3 லட்சம் குழந்தைகள் பயனடையவுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.