அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அவினாசியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். முதல்வராக பழனிசாமி பதவியேற்ற பின்னர், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்தும் முதல் போராட்டம் இதுவாகும்.
நீண்ட போராட்டம்:
காவிரியின் உபநதியான பவானியில், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெருமளவு நீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்நீரை சேமித்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை குளிர்விக்க, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வகுக்கப்பட்டது. பவானி நதியிலிருந்து கால்வாய் அமைத்து, 72 குளம், 538 குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டது. 60 ஆண்டுகளாகியும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து பொது மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர். கடந்த வருடம் பொது மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 2016 பிப்ரவரி 19ல் இந்த திட்டத்திற்காக ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கியது.
தொடருமா?:
ஒரு வருடமாகியும் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொது மக்கள் இன்று அவினாசி தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். காலையில் 5 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தற்போது 10 ஆயிரத்தை தாண்டியது. இந்த போராட்டம் தொடர்ந்து நடக்குமா என்பது குறித்து போராட்ட குழுவினர் இன்று மாலை அறிவிக்க உள்ளனர்.
முதல் போர்:
முதல்வராக இடைப்பாடி பழனிசாமி பதவியேற்று, ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அரசை எதிர்த்தும், அவர் வசமுள்ள பொதுப்பணித்துறை அமைச்சகத்தை கண்டித்தும் தமிழகத்தில் பொது மக்கள் நடக்கும் முதல் போராட்டம் இதுவாகும். முதல்வர் தேர்வான தொகுதி அமைந்துள்ள கொங்கு மண்டலத்தில் இந்த போராட்டம் நடக்கிறது.