ஜெ., நினைவிடத்திற்கு, அவரது பிறந்த நாளான, 24ம் தேதி அடிக்கல் நாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு, ஜெயலலிதா
விற்கு, தனியாக நினைவிடம் அமைப்பதற்கு, அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக, தமிழக அரசு, 15 கோடி ரூபாயை செல விட திட்டமிட்டுள்ளது. கடற்கரையில், ஏதாவது கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்தப் பிறகே, கட்டுமானப் பணியை துவங்க முடியும். ஆனால், இதற்காக, அரசு தரப்பில் இன்னும் விண்ணப்பிக்க வில்லை. கட்டுமான வரைபடமும், இறுதிசெய்யப் படவில்லை.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், குற்ற வாளியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள் ளார். அதனால், அரசு நிதியில், அரசு இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு சாத்தியமில்லை. எனவே, 'எம்.ஜி.ஆர்., - ஜெ., நினைவிடம் புனரமைப்பு பணி' என்ற பெயரில், ஏதாவது செய்ய சாத்தியம் உள்ளது. தனியாக அடிக்கல் நாட்ட முடியாது. அடிக்கல் நாட்டினால், சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.