நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை, செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை ஜிப்மர் மருத்துவமனையின் தொழில்நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.



ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மத்திய அரசின்கீழ் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் பெறும் வசதியை ஜிப்மர் மருத்துவமனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையை ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுபாஷ் சந்திர பரிஜா, ‘குறுஞ்செய்தி சேவை மூலம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் பரிமாற்றம், வழிகாட்டுதல்கள், விளக்கங்கள் வழங்கப்படும். ஜிப்மருக்கு வரும் நோயாளிகள் மருத்துவப் பதிவேட்டை ஆரம்பிக்கும் நொடி முதல் கடைசிக் கட்ட சிகிச்சை வரை பல்வேறு தகவல்கள், அவர்களுடைய செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய பிரிவுகள் மற்றும் கட்டடங்களின் குறிப்புகள் அனுப்பப்படும். குறிப்பாக, ஆய்வக அறிக்கைகள் சம்பந்தமான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை அனுப்பப்படும். இதன்மூலம், அவர்களின் நேரம் சேமிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் மூலம் மருத்துவ அட்டை பெறும் வசதியை ஜிப்மர் மருத்துவமனை கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...