ஒளியை பயன்படுத்தி புதிய பிரிண்ட் தொழில்நுட்பம் !!

அமெரிக்காவின் கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்தத் செலவை குறைப்பதுடன் மிக எளிமையானது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுப்பது இன்றியமையாததாக உள்ளது.தற்போது நடைமுறையில்

உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு பிடிக்கும் நிலையில், இதற்காக சிறப்பு பேப்பர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்த தாளில் வண்ணத்திற்காக பிரஸ்ஷியன் நீலம் உபயோகப்படுத்தப்படுகிறது. பேப்பரில் பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிவிடும். எழுத்துகள் இல்லாத பிற இடங்கள் வெள்ளை நிறமாக மாறும். இதன் வெப்பநிலையை 120 டிகிரி செல்சியஸ் வரை மாற்றும்போது வெவ்வேறு வண்ணங்களில் எழுத்துகள் பிரிண்ட் ஆகிறது.

எழுத்துகளின் நிறத்திற்காகவே பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிரிண்ட் செய்யப்படுவது ஒரு வாரத்திற்கு அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்பின் பிரிண்ட் அழிந்துவிடும். ஆனால் அந்தப் பேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் அச்சடிக்க பயன்படும் மை, பேப்பர், மற்றும் மின்சாரம் போன்றவை மீதமாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...