பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாளில், 21 பேர் முறைகேடு புகாரில் சிக்கினர். கடலுா ரில், மீண்டும் அதிக தேர்வர்கள் பிடிபட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். 5,000க்கும் மேற்பட்ட
பறக்கும் படையினர், மாநிலம் முழுவதும் சோதனையிட்டனர். இதில், இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட, 21 பேர், முறைகேடு புகாரில் பிடிபட்டனர்.
திருச்சியில், இரண்டு பள்ளி மாணவர்கள் சிக்கினர். கடலுாரில், 19 தனித் தேர்வர்கள் சிக்கினர். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், கடலுார் மாவட்டத்தில், அதிக மாணவர்கள், கூட்டாக காப்பியடித்து, பிடிபடுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த எண்ணிக்கை குறைந்தது. ஆனால், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், 19 பேர் சிக்கியது, கடலுார் மாவட்ட அதிகாரிகளை, அதிர்ச்சி அடைய செய்துள்ளது