டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைத்த 117 இன்ஸ்பெக்டர்கள் பரிதவிப்பு !!

டி.எஸ்.பி., பதவி உயர்வுக்கான அரசாணை வெளியாகியும், பணியிடம் ஒதுக்கப்படாத தால், 117 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழக காவல் துறையில், 1996 மார்ச் 1ல், 485 பேர், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தனர்; அதன் பின், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இரு ஆண்டு களுக்கு முன், டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க

வேண்டும்.ஆனால், இவர்களில், 88 பேருக்கு மட்டுமே, 2016 ஜனவரியில், டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முன், காவலராக பணியில் சேர்ந்தவர்கள், பணி மூப்பின் அடிப்படையில், டி.எஸ்.பி., பணியிடத்தில், 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி, வழக்கு தொடர்ந்ததால், பதவி உயர்வு தடைபட்டது.
88 பேர் : இந்த மனு, ஐகோர்ட்டில், தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்சில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட இடைவெளியில் தான், 88 பேருக்கு பதவி உயர்வு தரப்பட்டது; இன்னும், 398 பேர் காத்திருக்கின்றனர்.இவர்களில், பணித்திறன், தகுதி அடிப்படையில், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 88 பேருக்கு அடுத்ததாக, 117 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, 2016 அக்., 11ல், அரசாணை வெளியிடப்பட்டது. வழக்கு நிலுவையை காரணம் காட்டி, பதவி உயர்வு அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பிப்., 9ல், மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும், அரசாணை வெளியிடப்பட்ட, 117 பேருக்கும், பணியிடம் ஒதுக்கப்படவில்லை. தீர்ப்பு வெளியானபோது இருந்த அரசியல் குழப்பம் இப்போது இல்லை. ஆயினும், தாமதத்துக்கான காரணம் தெரியவில்லை.
22வது ஆண்டு : எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்த இவர்கள், 21 ஆண்டுகளாக, ஒரே ஒரு பதவி உயர்வு பெற்று, நேற்று, 22வது ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கிய பின்னரே, அடுத்த பட்டியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும்.அரசாணை வெளியாகியும், பணியிடம் ஒதுக்கப்படாததற்கான காரணம் புதிராக உள்ளது. இத்தனைக்கும் இத்துறை இருப்பது, முதல்வரின் கையில் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...