தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்கிறார்கள் 13 பேருக்கு அரசு அனுமதி!!!

தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தற்போது மத்திய அரசு பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே அர்ச்சனா ராமசுந்தரம், தேன்மொழி போன்ற ஏராளமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணியில் உள்ளனர்.



சமீபத்தில் கூடுதல் டி.ஜி.பி.க் கள் சஞ்சய் அரோரா, மாகாளி, ஐ.ஜி.க்கள் வெங்கட்ராமன், சஞ்சய் மாத்தூர், டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஐ.ஜி. ஆனந்த்குமார் சோமானி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் நரேந்திரன் நாயர், பி.விஜயகுமார், அனில்குமார் கிரி, ஏ.சரவணன், விஜெயந்திர பிதாரி, சேவியர் தன்ராஜ், அஸ்வின் கோட்னிஸ் ஆகிய 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்குச் செல்ல தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் 4 பேருக்கு கடந்த வாரம் மத்திய அரசு பணிக்குச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியது. சமீபத்தில் 9 பேருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இவர்களில் சேவியர் தன்ராஜ், அஸ்வின் கோட்னிஸ் ஆகியோருக்கு மத்திய அரசு பணி ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வருடம் ஆகும்

மாநில அரசு அனுமதி வழங்கிய போதிலும், மீதமுள்ள 11 பேருக்கும் மத்திய அரசு பணி கிடைக்க குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்று தெரிய வந்துள்ளது. தமிழக அரசு அனுமதித்துள்ள 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு இவர்களில் யார் யாரை தேர்வு செய்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும். அந்த கடிதத்தில் மத்திய அரசு பணிக்கு வர உங்களுக்கு சம்மதம்தானா? என்று கேட்கப்படும். தேர்வான அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து மீண்டும் மத்திய அரசுக்கு தகவல் அனுப்ப வேண்டும். அதன்பிறகுதான் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணி ஒதுக்கப்படும்.

அதன்பிறகு மாநில அரசு இவர்களை இங்குள்ள பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இத்தனை விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் இவர்கள் மத்திய அரசு பணியில் சேர முடியும்.

மேலும் ஆர்வம்

மத்திய அரசு பொறுப்பில் உள்ள சி.பி.ஐ. போலீஸ், ஐ.பி. (மத்திய உளவுப்பிரிவு), மத்திய தொழில் பாதுகாப்பு படை, துணை ராணுவம் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புகளில் இவர்களுக்கு பணிநியமனம் கிடைக்கும்.

இவர்களைத் தவிர கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட மேலும் ஏராளமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் தமிழக அரசின் அனுமதி கேட்டு விரைவில் விண்ணப்பிக்க உள்ளனர்.

காரணம் என்ன?

தமிழக ஆட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கை, முக்கியமான பதவிகளில் அரசுக்கு வேண்டிய அதிகாரிகளை 3 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்க செய்வது, நேர்மை மற்றும் திறமை வாய்ந்த அதிகாரிகள் ஓரங்கட்டப்படுதல், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி, உளவுப்பிரிவு ஐ.ஜி. பதவி போன்ற முக்கிய பதவிகளுக்கு கூடுதல் பொறுப்பாக அதிகாரிகளை நியமித்தல், டி.ஜி.பி. போன்ற அதிகாரிகள் ஓய்வு பெற்று செல்லும்போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளாக இருந்தால் ஓய்வு பெற்ற பிறகும் அவர்களுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்வது போன்ற அரசின் நடவடிக்கைகளால் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் மனக்குமுறல்களோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற நிலைதான் தற்போது தமிழக ஆட்சியில் நிலவுவதாலும், அடுத்த 4 வருடங்களுக்கு தமிழகத்தில் குழப்பமான ஆட்சி நிர்வாகமே நீடிக்கும் என்பதாலும் மத்திய அரசு பணிக்குச் செல்ல ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர்வமாக இருப்பதாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலை நீடிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...