மதுரை காமராஜ் பல்கலை, புதிய பொறுப்பு பதிவாளராக ஆறுமுகம் பொறுப்பேற்ற, 18 நாட்களில் துணை பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட, 101 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பணியிடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது. பதிவாளர், டீன், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் உட்பட முக்கிய
பதவிகளும் காலியாக உள்ளன. பிப்., 10ல், 'பொறுப்பு' பதிவாளராக ஆறுமுகம், 'பொறுப்பு' தேர்வாணையராக, முத்துச்செழியனை நியமித்து, உயர்கல்வி செயலர் கார்த்திக் உத்தரவிட்டார்.
மாற்றமே மாறாதது : ஆறுமுகம் பொறுப்பேற்றது முதல், பல துறைகளிலும், துணை பதிவாளர் முதல், தொகுப்பூதிய ஊழியர் வரை, தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், பணி மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 18 நாட்களில், 101 பேருக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: பதிவாளர் பொறுப்பேற்றதில் இருந்து, இடமாறுதல் மட்டுமே செய்து வருகிறார். தற்போது, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அல்பருவ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன; இந்த பணிகள் பாதித்துள்ளன. கண்காணிப்பாளர் ஒருவர் மாற்றப்பட்டு, அந்த பணியை அவர் தொடர, ஒரு மாதம் வரை ஆகும். துணைவேந்தர் இல்லாத நிலையில், பொறுப்பு பதவி வகிக்கும் ஒருவர், இது போன்ற ஒட்டுமொத்த மாறுதல் செய்ய முடியாது. இது குறித்து, உயர்கல்வி செயலருக்கு புகார் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவாளர் ஆறுமுகம் கூறியதாவது: அனைவருக்கும் அனைத்து துறை பணிகளும் தெரிய வேண்டும். பலர், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் உள்ளனர். 'பொறுப்பு பதிவாளருக்கு மாறுதல் செய்ய அதிகாரம் இல்லை' என்பது தவறு. யாருடைய பின்னணியிலும் மாறுதல் செய்யவில்லை. இது, நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை. அரசு துறைகளில் செய்யப்படும் மாற்றங்கள் போல் தான் இதுவும். துறை தலைவர்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.மேலும், 'பல்கலை கேன்டீனுக்கு பல்வேறு துறைகள், பிரிவுகளில் இருந்து செலுத்த வேண்டிய, 14 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை, 24 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்' எனவும், பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.