பிளஸ்–2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று வணிகவியல், மனை அறிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக 14 பேர் பிடிபட்டனர். அவர்களில் 10 பேர் தனித்தேர்வர்கள். 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள்.
கடலூர் மாவட்டத்தில் 5 தனித்தேர்வர்களும், 2 பள்ளிக்கூட மாணவர்களும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 4 தனித்தேர்வர்களும், திருச்சி மாவட்டத்தில் 2 பள்ளிக்கூட மாணவர்களும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு தனித்தேர்வரும் பிடிபட்டனர்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.