22 பேருக்கு அடித்தது 'லக்' : டி.ஆர்.ஓ., பதவி உயர்வு !!

 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் எதிரொலியாக, 22 பேருக்கு டி.ஆர்.ஓ., பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த பதவிகளுக்கு பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி

வைக்கப்பட்டது. ஆனாலும் பதவி உயர்வு வழங்குவதில் இழுபறி நீடித்தது. இதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, 22 பேருக்கு டி.ஆர்.ஓ., பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல் காலாவதியானதால் புதிய பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலர் பார்த்திபன், மாநில செயலர் முருகையன் கூறியதாவது: காலாவதியான பட்டியலை புதுப்பித்து அதில் இடம் பெற்ற அலுவலர்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். எனவே விரைந்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...