25 பந்தல்,10 இடங்களில் தொடுதிரை.. களை கட்டும் ஓ.பி.எஸ். உண்ணாவிரத ஏற்பாடு!


ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை
அருகே, உண்ணாவிரதம் இருக்க கேட்ட அனுமதி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மாற்றித் தரப் பட்டுள்ளது. வடசென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரான ஆர்.எஸ். ராஜேஷ் , முன்னாள் மந்திரி இ.மதுசூதனன் ஆகியோர், விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஆர்.எஸ். ராஜேஷ், "ஓ.பி.எஸ். மற்றும் முக்கிய பிரமுகர்கள் 100 பேர் அமரும் வகையில், பிரமாண்ட மேடை ஒன்றும், மேடைக்கு இரண்டு பக்கமும் அடுத்தடுத்து 24 மேடைகளும் அமைக்கிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் அதிகாலை நான்கு மணிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.செய்தி சேகரிப்புக்காக, செய்தியாளர்களுக்கு என ஒரு தனி மேடை அமைக்கப்படுகிறது. உண்ணாவிரத மேடையில் இருப்பவர்கள் பேசுவதை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக 10 இடங்களில், தொடு திரை அமைத்துள்ளோம். லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பை அளித்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

உண்ணாவிரதப் பந்தலைச் சுற்றிலும், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கும் போஸ்டர்கள் நூற்றுக்கணக்கில் இப்போதே ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு போஸ்டர் வாசகம் "ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவனென்றாலும் விட மாட்டேன்.."

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...