மகேந்திரகிரியில் சந்திரயான் -2 விண்கல சோதனை : இஸ்ரோ தலைவர் தகவல்!!!

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் சந்திரயான் -2 விண்கலத்தை நிலவில் தரை இறக்குவதற்கான கருவியின் சோதனை நடைபெற்று வருகிறது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார். சந்திரயான் -2 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 7 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் பேசியதாவது:
உலக அளவிலான கல்வித் திட்டத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விண்வெளியிலிருந்து பூமியைக் கண்காணித்து, சுற்றுச்சூழல், கடல், நீர்வள ஆதாரங்கள் தொடர்பாக அரசுக்கு முக்கிய தரவுகளை இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் அளித்து வருகின்றன. இந்தத் தகவல்கள் தேசிய அளவிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உதவுகின்றன.
புயல் உருவாகும் இடம், மீன்கள் கிடைக்கும் இடங்கள், புயல் எச்சரிக்கை ஆகியவை குறித்து மீனவர்களுக்கு துல்லியமாக தெரிவிக்கும் வகையில், திசைகாட்டும் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் சேகர் பாசு, போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.சிவக்குமார், நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
1,305 இளநிலைப் பட்டதாரிகள், 405 முதுநிலைப் பட்டதாரிகள், 113 ஆய்வியல் நிறைஞர்கள், 49 முனைவர் பட்டங்கள் என மொத்தம் 1,872 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ், துணைவேந்தர் வி.தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...