நாட்டிலேயே முதல் முறை.. தமிழக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டு முகாம்!

 நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டும் முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கல்வியிலும், சமூக
விழிப்புணர்விலும் தமிழகம் நாட்டிலேயே முதல் மாநிலமாக வருவதற்கு, புரட்சி தலைவி அம்மா காட்டிய வழியில் இந்த அரசு செயல்படும். அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பாக பொதுத்தேர்வு தேர்வு எழுத வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில், 'கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்' என்ற பெயரில் கவுன்சலிங் தர உள்ளோம்.

32 மாவட்ட தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என மாநிலம் முழுக்க மொத்தம், 541 இடங்களில் இதை நடத்த உள்ளோம். பங்கேற்க வரும் மாணவர்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு, குடிநீர் வசதி செய்து தருவார்கள்.

ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். ஏதாவது ஒருநாளில் மாணவர்கள் வசதிக்கேற்ப கலந்து கொள்ளலாம். மேல்நிலைப்பள்ளிகளில் இந்த கேம்ப் நடைபெறும். அறிவியல், பொறியியல், பொதுத்துறை நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்படும். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவருகிறோம்.

அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி, சிறப்பான வகையில் மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றார் செங்கோட்டையன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...