தந்தை இறந்த சூழ்நிலையிலும் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி !!

தேர்வு அறையில் மாணவி மகாலட்சுமி கன்னத்தில் கை வைத்தபடி சோகத்தில் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.

தந்தை இறந்த சூழ்நிலையில் மனவேதனையுடன் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதியது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

*ஸ்ரீமுஷ்ணம்:*



கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.மலைமேடு பகுதியை சேர்ந்தவர் தனராஜ்(வயது 51). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், மகாலட்சுமி(16) என்ற மகளும் உள்ளனர்.

மகாலட்சுமி ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். பொது தேர்வு நடைபெறுவதால் தேர்வுக்கு அவர் படித்து வந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமியின் தந்தை தன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மாலை 6 மணியளவில் திடீரென்று இறந்து விட்டார். தந்தையின் உடலை பார்த்து மகாலட்சுமி கண்ணீர் விட்டு கதறினார். இரவு முழுவதும் அவர் அழுது கொண்டே இருந்தார்.

தேர்வு எழுத செல்ல மனம் இல்லாமல் இருந்தார். மகாலட்சுமி நன்றாக படிக்கக்கூடிய மாணவி அவர் தந்தை இறந்ததால் மனச்சோர்வுடன் இருந்தார். இதைஅறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். தேர்வு எழுதும் படி அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மகாலட்சுமி அழுது கொண்டே தேர்வுக்கு படித்தார். இன்று காலை அவர் வீட்டில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள த.வீ.செ.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

கண்ணீர் சிந்தியபடியே அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதினார். தந்தை இறந்த சூழ்நிலையில் மனவேதனையுடன் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதியது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...