தமிழகத்தில் மார்ச் -30 முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!!!

தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச்-24) நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் குமாரசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
காப்பீடு தொகை உயா்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்,
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை உயா்த்தியதை கண்டித்தும் மார்ச்-30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 9 லட்சம் லாரிகள் ஓடாது என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...