வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 325 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவில் கையெழுத்திட்டார். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஏற்கனவே 500 டாஸ்மாக்
கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 கடைகள் மூடப்படுவதாக கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இந்தக் டாஸ்மாக் கடைகளில் 325 கடைகள் வழிபாட்டுத் தலங்களின் அருகிலும், கல்விக் கூடங்களின் அருகிலும் உள்ள கடைகள் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வர உள்ள நிலையில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.