மின்தடை காரணமாக, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி்யை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் பாதித்த நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்புக்கான, டயாலிசிஸ் சிகிச்சை
இன்று அளிக்கப்பட்டது. அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதில் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த நோயாளிகளின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பிறகு போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்துள்ளார்.