தனக்கு சொத்தே இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த மாநகராட்சி கவுன்சிலர் தன் மனைவி மற்றும் குடும்பத்தின் பெயரில் 4 கோடிக்கு வீடுகள் மற்றும் நகைகளை வாங்கி குவித்துள்ளார் என்று வருமான வரித்துறை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால், அவரின் வருவாய்
குறித்து விசாரிக்க தயாராக உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி 196வது வார்டில் (ஈஞ்சம்பாக்கம்) கவுன்சிலராக பதவி வகித்து வந்தவர் வி.அண்ணாமலை. இவர் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரிவித்து இருந்தார். சென்னை மாநகராட்சியின் 196-வது வார்டு அதிமுக கவுன்சில ராக பதவி வகித்தவர் அண்ணா மலை. இவருக்கு சொந்தமாக 12 பங்களாக்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும், ஆனால் அவற்றுக்கு சொற்ப தொகையே சொத்து வரியாக செலுத்தி வருவ தாகவும் கூறி ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வேட்பு மனுவில் கூறியுள்ள சொத்து விபரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். நாம் இது குறித்து ‘வீடுகள் அல்ல பங்களாக்கள்’ என்ற தலைப்பில் விரிவான செய்தியை நமது மின்னம்பலம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதையடுத்து, மாநில தேர்தல் கமிஷன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அண்ணாமலையின் வேட்புமனுவில் கூறப்பட்ட சொத்து பட்டியலில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் பொது நல வழக்காக விசாரித்து அண்ணாமலையின் சொத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, வருமான வரித்துறையின் இயக்குநர் ஜெனரல் பி.முரளிகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலம் அளித்தார். அதன்படி, அண்ணாமலையின் வங்கிக் கணக்கு, வீடு, அவரது மனைவி பெயரில் வீடு, காலிமனை, மகள் பெயரில் நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட 12 சொத்துக்கள் உள்ளன. இதில், 700 கிராம் தங்க நகைகளும் அடங்கும். மேலும், இவற்றின் மொத்த மதிப்பு தங்க நகை தவிர்த்து ரூ.3 கோடியே 78 லட்சத்து 15,463 ஆகும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அதை அமல்படுத்து வருமானவரித் துறை தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.