பொதுச்செயலாளர் பதவி... தேர்தல் ஆணையத்துக்கு 7ம் தேதி பதில் !!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா வரும் 7-ந்தேதி பதில் அளிப்பார் என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிச. 29-ந்தேதி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் 31-ந் தேதி பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வில் தனி அணி உருவானது. அந்த அணியினர் சசிகலாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த அணியினர் டில்லி சென்று தலைமை தேர்தல் அலுவலகத்தில் சசிகலாவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.

தொடர்ந்து பொதுச்செயலாளர் நியமன் தொடர்பாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு பதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தினகரன் பதில் அனுப்பினார். ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.

"டி.டி.வி. தினகரன் உங்கள் கட்சியின் எந்த பதவியிலும் இல்லை. எனவே அவரது பதிலை ஏற்க இயலாது. பதில் கடிதங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். அதில் உங்கள் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். மார்ச் 10-ந்தேதிக்குள் உரிய பதிலை அனுப்ப வேண்டும் என்றும் சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து தேர்தல் கமிஷனுக்கு எத்தகைய பதில் அளிப்பது என்று தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்திருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமிஷனிடம் கடிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கமிஷன் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு சசிகலா மூலமாக அவர் கையெழுத்துடன் பதில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கையெழுத்திட்டதும் அது தலைமை தேர்தல் கமிஷன் வசம் வரும் 7-ந் தேதி ஒப்படைக்கப்படும் என்று அ.தி.மு.க. வக்கீல் செந்தில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...