ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 8 லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !!

ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக 6–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது.


ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர்
விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று வரை சமர்ப்பித்தனர்.

பி.எட் பட்டதாரிகள் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றனர். அவர்களில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேர் பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாளாகும்.

ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பட்டதாரிகள் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...