பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக 9-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் ...!!

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக நாடாளுமன்றம் வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கூடியது. அப்போது நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதே நாளில் நாடாளுமன்ற ஆய்வறிக்கையும், அடுத்த நாளில் மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

அப்போது கேரளாவில் பா.ஜ.க-வினர் மற்றும் RSS அமைப்பினர் மீதான தாக்குதல் குறித்த பிரச்சனை எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை, ரயில்வே, நிலக்கரி, விவசாயம் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி துணை சட்ட மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். மக்களவையில் தனி நபர் மசோதா பிரிவில் பாரதிய ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே மசோதா ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் ஆகிய பகுதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. இதே போன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தனி நபரை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...