குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ளும் நாளைய நிகழ்ச்சிகள்....!

தாம்பரம் விமானப்படை விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்ணும் சற்று நேரத்தில் தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்.

இதையொட்டி, 1,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நாளை காலை(மார்ச் 3) நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.


பின், கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை(மார்ச் 3) காலை, 9:00 மணியில் இருந்து, 11:20 வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின், மதியம், 12:00க்கு, அடையாறில், இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு, பிற்பகல், 1:15க்கு, டில்லி புறப்பட்டு செல்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...