ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல்
வழங்கியது. எனவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கடந்த 20 நாட்களாக பொதுமக்களும் விவசாயிகளும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 2ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டு மாணவர்கள் தரப்பில் சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை காவல்துறை நிராகரித்துவிட்டது. எனவே, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாணவர்கள் சார்பில் சாதிக் பாட்ஷா என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட மனுவை காவல்துறை நிராகரித்துவிட்டது. எனவே, வேறொரு நாளில் போராட்டம் நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாணவர்கள் காவல்துறையிடம் மற்றொரு மனு அளிக்க வேண்டும். இதற்கு காவல்துறை ஆணையர் அனுமதியளிக்க வேண்டும் என்று கூறி நீதிபதி பி.ராஜேந்திரன் வழக்கை முடித்துவைத்தார்.