பொதுத்தேர்வு எழுத ஒன்றரை கி.மீ., நடந்து செல்லும்... அவலம் உடல் அளவில் சோர்ந்து போகும் அரசு பள்ளி மாணவர்கள்!!!


டி.என்.பாளையத்தில் உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கு, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று தேர்வு எழுதும் அவலம் உள்ளது. அவர்களுக்கு சிறப்பு வாகன வசதி ஏற்படுத்தி தர கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் 8ம் தேதி துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 19 ஆயிரத்து 572 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தவளக்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வசதியாக, டி.என்.பாளையத்தில் உள்ள ஏ.ஜே. என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி, பொதுத்தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டது.இப்பள்ளியில் தற்போது 642 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதில், தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய பகுதியில் உள்ள 4 தனியார் பள்ளியை சேர்ந்த 364 மாணவர்களும், அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த 278 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்கள் 80 பேரும் தேர்வு எழுதி வருகின்றனர்.இந்த தேர்வு மையம் உள்ள டி.என்.பாளையம் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஒரே ஒரு பி.ஆர்.டி.சி., பஸ் வந்து செல்கிறது. இதனால், இந்த தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள், அபிஷேகப்பாக்கத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு நடந்தே செல்கின்றனர்.தனியார் பள்ளி நிர்வாகம், அவர்களது மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், இந்த மையத்திற்கு தேர்வு எழுத வரும் அரசு பள்ளி மாணவர்களை யாரும் கண்டு கொள்ளாததால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், அபிஷேகப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து டி.என்.பாளையத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு நடந்தே செல்கின்றனர். மெயின் ரோட்டில் இருந்து தேர்வு மையத்திற்கு நடந்து செல்ல குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது.தற்போது, காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வருவதால் ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து செல்லும் மாணவர்கள் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்து விடுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, இப்படி ஒரு சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களால் எப்படி நல்ல முறையில் தேர்வு எழுதிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு சில பெற்றோர் அவர்களது பிள்ளைகளை பைக் மற்றும் சைக்கிளில் தேர்வு மையத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளி மாணவ, மாணவியர் நடந்து தான் செல்கின்றனர்.எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, அபிஷேகப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தேர்வு மையமான டி.என்.பாளையம் ஏ.ஜே., மேல்நிலைப் பள்ளிக்கு, அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தர கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோட்டை விட்ட கல்வித்துறைதேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதி, போக்குவரத்து வசதிகளை வைத்து, தேர்வு மையம் அறிவிக்கப்படுகிறது.புதுச்சேரி கல்வித்துறை தேர்வு எழுதும் மாணவர்கள் விபரம், தேவையான தேர்வு மையம் குறித்து தமிழ்நாடு தேர்வு துறை இயக்குனரகத்திற்கு தகவல் தரும். கடலுார் மண்டல தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக, துணை இயக்குனர் மூலம், ஆய்வு செய்யப்பட்டு, புதுச்சேரியில் தேர்வு மையங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதுபோல் டி.என்.பாளையம் தேர்வு மையத்தில் 650 மாணவர்கள் எழுதும் அளவிற்கு வசதி இருந்ததால், தேர்வு செய்துள்ளனர். இது கிராம பகுதி என்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்த கல்வித்துறை, போக்குவரத்து வசதி உள்ளதா என்பதை கவனிக்காமல், கோட்டை விட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...