சமூக ஆய்வு மையங்களுக்கு நிதி உதவி நிறுத்தம் : யுஜிசி அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லும் செயலும் எப்படி இருவேறு திசையில் இருக்கிறது என்பதை யுஜிசி-யின் இந்த அறிவிப்பு வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.



டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தலித்துகளின் நலனுக்கான புதிய செயல் திட்டங்களை தொடங்க உள்ளது என்று அறிவித்தபோது, அவருடைய அரசாங்கமோ நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் சமூக ஆய்வு மையங்களுக்கான நிதி உதவிகளை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து தி டெலகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சமூக ஆய்வு மையங்களில் விளிம்புநிலை மக்கள் ஆய்வு, பழங்குடியின மக்கள் ஆய்வு, அம்பேத்கர் தத்துவங்கள், தலித் ஆய்வுகள் என்று பல்வேறு சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு யுஜிசி மூலம் சிறப்பு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இப்படியான ஆய்வுகள் சமூக மாற்றத்தையும், சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியை மதிப்பிடுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி 11வது ஐந்தாண்டு திட்டம் (2007 - 2012) மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட பல ஆய்வு மையங்களுக்கு நிதி உதவியை நிறுத்தியுள்ளது. கடந்த காலங்களைப்போல இந்த சமூக ஆய்வுகளுக்கு 13வது ஐந்தாண்டு திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவிகள் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யுஜிசி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இந்த பல்கலைக்கழகங்களில் உள்ள சமூக ஆய்வு மையங்களுக்கான நிதிஉதவி திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுற்றதாக தெரிவித்துள்ளது.

யுஜிசி செயலர் சுஷ்மா ரத்தோர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில், ‘மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவுப்படி 12வது ஐந்தாண்டு திட்டம் முடிவடைந்தபிறகு இந்த ஆய்வு மையங்களுக்கு யுஜிசி-யின் நிதியுதவிகள் வழங்கப்படாது. மேலும் சமூக பிரதிநிதித்துவக் கொள்கை திட்டங்களுக்கு 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவுக்குப் பிறகு இந்த சமூக ஆய்வு மையங்களின் எந்தவித செயல்பாட்டுக்கும் யுஜிசி பொறுப்பாகாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

டெலகிராஃப் பத்திரிகைக்கு மத்திய அமைச்சகமும் யுஜிசி-யும் அளித்த விளக்கத்தில் இந்த உத்தரவு அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மையங்கள் பல்கலைக்கழகங்களால் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர், அம்பேத்கர் ஆய்வாளர் மற்றும் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் என்.சுகுமார் கூறியதாவது, ‘யுஜிசி-யின் இந்த அறிவிப்பு முரண்பாடாக உள்ளது. இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும் தலித் ஆய்வுகள், அம்பேத்கர் தத்துவம், இடஒதுக்கீடு போன்ற சமூக பிரதிநிதித்துவக் கொள்கைகளைப் பற்றிய ஆய்வை யுஜிசி இழுத்து மூடியிருக்கிறது. ஆனால் வேதங்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு மட்டும் சிறப்பு நிதிஉதவியை முறைப்படுத்தியுள்ளது. அதேபோல, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் சமூக ஆய்வு மையத்தை மூடியுள்ளது.

இதுகுறித்து ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது: இந்த மையத்தின் எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. மாணவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள். அப்போது அந்த மையங்களின் பேராசிரியர்கள் அவர்களுடைய வேலையை இழப்பார்கள். இதுபோல, நாடு முழுவதும் நூற்றுக்கும் மேலான பெண்கள் ஆய்வு மையங்கள் உள்ளன. அவை பத்தாண்டுககளாக ஒவ்வொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பாக டெலகிராஃப் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செய்திதொடர்பாளர் கன்ஷ்யாம் கோயல் பதிலளிக்கவில்லை.

இதுதொடர்பாக யுஜிசி தலைவர் கூறியதாவது: ‘இந்த சமூக ஆய்வு மையங்களுக்கு நிதி எதுவும் நிறுத்தப்படவில்லை. இந்த மையங்களெல்லாம் பட்ஜெட்டில் திட்டமிடப்படாதவை. பெரும்பாலான மையங்கள் திட்டமிடப்படாத வருவாயைப் பெறுகின்றன என்று மழுப்பலாக பதிலளித்தார்.

ஒரு பக்கம் தலித்துகளின் நலனுக்கான புதிய சுற்று திட்டங்களை அறிவிப்பதாகச் சொல்லும் பிரதமர் மோடி, மறுபக்கம் அவருடைய அரசு தலித் சமூக ஆய்வு மையங்களுக்கான யுஜிசி நிதியை நிறுத்துகிறது. பிரதமர் மோடியின் இரட்டை வேடம் அம்பலமாகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...