ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் இந்திய பெண்கள்!!

இந்தியாவில், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண் ஊழியர்களை விட, 25 சதவீதம் குறைவான சம்பளம் பெறுவதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.



*குறைவான சம்பளம்:*

பணியிடம், பணியின் தன்மை, துறை ரீதியான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், வேலைக்கு செல்லும், 2,000 பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: இந்தியாவில், ஆண் - பெண் ஊழியர்களிடையிலான சம்பள விகித வேறுபாடு, சராசரியாக, 25 சதவீதமாக உள்ளது. பொதுவாக, ஒரே மாதிரியான வேலையை செய்யும், ஆண் - பெண் ஆகிய இருவருக்கும், ஒரே அளவிலான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆண் ஊழியர்களை விட, பெண் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

*வேறுபாடு:*

கடந்த, 2015ல், ஆண் - பெண் ஊழியர்களிடையிலான சம்பள வேறுபாடு, 27.2 சதவீதமாக இருந்த நிலையில், 2016ல் இது, 25 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் உற்பத்தி துறையில், சம்பள வேறுபாடு, 29 சதவீதமாகவும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஆண் - பெண் ஊழியர்களிடையிலான சம்பள வேறுபாடு, 25.8 சதவீதமாக உள்ளது.

*சராசரி ஊதியம்*:

தற்போதைய நிலவரப்படி, ஆண் ஊழியர் ஒருவரின் ஒரு மணி நேர சராசரி ஊதியம், 345 ரூபாயாகவும், பெண் ஊழியர் ஒருவரின் ஒரு மணி நேர சராசரி ஊதியம், 259 ரூபாயாகவும் உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...