ராம மோகன ராவிற்கு மீண்டும் பதவி!!!

ராம மோகன ராவிற்கு தொழிற்கு முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ், இவருடைய வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள இவருடைய அறையிலும் கடந்த டிச., 21ம் தேதி
வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளராக இருந்த ராஜாராம் நில நிர்வாக துறையின் முதன்மை செயல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...