அனைத்து வங்கி கணக்குகளிலும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெட் பேங்கிங் வசதி செய்து தர வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சமாளிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு சுற்றிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில், ‘‘அனைத்து வங்கி கணக்குகளிலும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அதே சமயத்தில், அனைத்து வங்கி கணக்குகளுக்கும் நெட்பேங்கிங் வசதியை அவசியம் செய்து தர வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், விரைவில் பண பரிமாற்றங்கள் நடைபெறவும் உதவும். இதனால் வாடிக்கையாளர்கள் உலகளவில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “தற்போதுவரை 35 சதவீத வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளது. அவற்றை ஆன்லைன் சேவைக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. அதனால் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு பணி துரிதப்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.