ரத்தம் கொடுத்து லஞ்சபணம் கட்டிய ஆதிவாசி மாணவிகள்!

நெஞ்சைத் தொட்ட உண்மைச் சம்பவம்:ரத்தம் கொடுத்து பணம் கட்டிய ஆதிவாசி மாணவிகள்!

அனைத்து ஆதிவாசி மாணவிகளுக்கும் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஆதிவாசி மாணவிகளுக்கான விடுதியை அரசு சார்பில் இலவசமாக நடத்தி வருகிறது. இங்கு வசதியில்லாத ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.


இந்த விடுதியில் பைதேகி தாகூர் என்ற பெண் வார்டனாக இருந்து வந்தார். அவர், அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.ஆனால், அங்கு தங்கி இருந்த மாணவிகள் அனைவரும் மிகவும் ஏழைகள் ஆவர். அவர்களால் வார்டன் கேட்ட அளவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. சிறுசிறு வேலைகள் செய்து பணத்தை சில மாணவிகள் கட்டியுள்ளனர்.வேலைகள் கிடைக்காத மாணவிகள் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சென்று ரத்தத்தை கொடுத்து அதற்கு கிடைத்த பணத்தை கொண்டு வார்டனிடம் கொடுத்து வந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஒருவர் இவர்களிடம் அக்கறையாக விசாரித்துள்ளார். அப்போது தான் ரத்தத்தை கொடுப்பதன் மூலம் கிடைக்கும் கிடைக்கும் பணத்தை பைதேகி தாகூரிடம் கொடுத்து வந்த விஷயத்தை கூறியுள்ளனர்.சமூக அக்கறை கொண்ட அந்த நபரின் மூலம் இந்த விஷயம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து ஆதிவாசி கமி‌ஷனின் உதவி ஆணையர் ஜெயின் விசாரணை நடத்தினார். அதில், விடுதி வார்டன் மாணவிகளிடம் லஞ்சம் பெறுவதும், மாணவிகள் பலர் இதேபோல் ரத்தத்தை விற்று காசு கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...