கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் சட்டவிரோதமாக லட்சக்கணக்கான டன் தாது மணல் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது என்பது செய்தியாக வெளியாகிவருகிறது. இதைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்னையை
தாமாக முன்வந்து வழக்காக ஏற்று விசாரணை செய்தது. பின்னர், 2016ஆம் ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ள தாது மணல் தொழில் குறித்த விவரங்களை மத்திய அணுசக்தி துறையும், வி.வி.மினரல்ஸ் நிறுவனமும் தாக்கல்செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பது நிற்கவில்லை. இந்தப் பிரச்னை 2013ஆம் ஆண்டு வழக்குப்படி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதற்கும் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசு தாது மணல் கடத்தல் குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.